கடலூர் மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா பாதிப்பு 2 பேர் சாவு; 18 இடங்களுக்கு சீல்

கடலூர், ஏப். 15:  கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 175 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 26,977ஆனது. 18 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குறைந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் அலை காரணமாக மீண்டும் நோய் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று மேலும் 175 பேருக்கு  நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,977 ஆனது.

நேற்று  சிகிச்சை  முடிந்து  41 பேர் வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 25 ஆயிரத்து 660 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 723 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 298 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 86ஆயிரத்து  814 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் 18 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் வெளியாட்கள் அனுமதி மறுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. நேற்றைய பாதிப்பில் ஏற்கனவே நோய்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 95 பேர் அடங்கும். 322 பேர் பரிசோதனை காத்திருப்பில் உள்ளது.. கடலூர் அரசு மருத்துவமனையில் புவனகிரியைச் சேர்ந்த 59 வயது ஆண், சென்னை தனியார் மருத்துவமனையில் பண்ருட்டியை சேர்ந்த 42 வயது ஆண் ஆகியோர் நோய் தொற்று காரணமாக பலியானார்கள் இதனை தொடர்ந்து இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கைைை 296 ஆனது.

Related Stories: