கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

திருச்சி, ஏப்.14: திருச்சி உறையூர் காவல் நிலைய எல்லை பகுதியான குழுமாயிகரை கல்லாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சமயபுரம் வெங்கங்குடியைச் சேர்ந்த பிரவீன்குமாரை போலீசார் கைது செய்து சுமார் 3 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பிரவீன்குமார் மீது ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி மற்றும் கொள்ளை வழக்குகள் என திருச்சி மாநகரம் உறையூர் காவல்நிலையத்தில் 2 வழக்குகளும், அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.பிரவீன்குமாரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் ஆணையின் படி திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் பிரவீன்குமாரிடம் குண்டர் தடுப்பு காவல் ஆணை வழங்கப்பட்டது.

Related Stories:

>