கணவர் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது

திருச்சி, ஏப்.14: திருச்சி உடையான்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரம்யா(32). இவர் நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது,குடும்பத்தகராறு காரணமாக தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனக்குத்தானே ஊற்றிக்கொண்டும், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் எச்சரித்த போதும் மீறி தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அவரை அருகில் இருந்த பெண் காவலர்கள் மீட்டு கே.கே.நகர் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பணியில் இருந்த பெண் தலைமை காவலர் உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு முயல்தல் மற்றும் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ரம்யாவை கைது செய்தனர்.

Related Stories:

>