உத்தமபாளையம் வட்டாரத்தில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேவாரம், ஏப்.14: உத்தமபாளையம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களில் கொரோனாவிற்கு 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. உத்தமபாளையம் வட்டாரத்தில் கொரோனா இரண்டாம் அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உத்தமபாளையம் வட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களில் மட்டும் 16 பேர் வரை  பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி உத்தமபாளையம் பேரூராட்சியில் மட்டும் 9 பேர்,   பண்ணைப்புரம் 2 பேர், ராயப்பன்பட்டி, தேவாரம், கோம்பை ஒருவர் என  ஒரு வட்டார அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகள் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு,  தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன், அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், சுகாதாரத் துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் நடப்பது, சமூக இடைவெளி இல்லாமல் டீக்கடை, ஹோட்டல்களில் நிற்பது, டாஸ்மாக் கடைகளில் அடித்து பிடித்து சரக்கு வாங்குவது, பஸ்களில் பயமில்லா பயணம் என கொரோனா தடுப்பே இல்லாமல் மக்கள் சுற்றுவது என அதிகரித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த சுகாதாரத்துறை முன்வர வேண்டும் என்றனர்.

Related Stories: