நாமகிரிப்பேட்டையில் ₹65 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, ஏப்.14: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை  சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளுடன் குவிந்தனர். அதேபோல், ஆத்தூர் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதலுக்காக வியாபாரிகளும் வந்திருந்தனர். ஆகமொத்தம் 1500 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்தது. விரலி ரகம் குவிண்டால் ₹₹7,923  முதல் ₹9,599 வரையிலும் ஏலம் போனது. உருண்டை ரகம் குவிண்டால் ₹7,499 முதல் ₹8,102 வரையிலும், பனங்காலி ரகம் ₹15,896 முதல் ₹18,909க்கும் விற்பனையானது. ஆகமொத்தம் 1500 மூட்டை மஞ்சள்  ₹65 லட்சத்திற்கு விற்பனையானது.

Related Stories: