கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அலைமோதும் கூட்டம்

ஊட்டி,ஏப்.13: நீலகிரி மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மார்ச் முதல் வாரம் வரை 5 முதல் 10 பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை துவங்கியுள்ள நிலையில், நீலகிரியில் தற்போது 35 பேர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதனால் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை சுமார் 30 சதவீதம் அதாவது 2.50 லட்சம் பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.

இதில் சுமார் 55 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுதவிர முதல் தவணை முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கும் ஊசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>