நாகை, மயிலாடுதுறையில் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக 1050 படுக்கை

நாகை, ஏப்.13: கொரோனா வைரஸ் தடுப்பு ஆய்வு கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கண்காணி ப்பு அலுவலர் முனியநாதன் தலைமை வகித்தார். கலெக்டர் பிரவீன்பிநாயர் முன்னிலை வகித்தார். அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் கூறியதாவது:

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கி வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதேபோல் பொதுமக்களுடன் ஒன்றாக இணைந்து இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறது. நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 895 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 338 நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இரண்டு மாவட்டங்களில் இதுவரை 36 ஆயிரத்து 600 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 6 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

நாகை மாவட்டத்திற்கு நாகை, வேதாரண் யம், மயிலாடுதுறை மாவ ட்டத்திற்கு சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய 4 இடங்களில் கொரோனா வைரஸ் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக 580 படுக்கை வசதிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 470 படுக்கை வசதிகளும் ஆக மொத்தம் 1050 படுக்கை வசதிகள் உள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்படும். வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சிகள், பேருராட்சிகள், உள்ளாட்சியை சேர்ந்த அலுவலர்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் அபாராதம் வசூலிக்கப்படுகிறது.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள் வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். வியாபாரிகள் சங்கத்தின் மூலமாக நுகர்வோர்களுக்கு முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவைகள் குறித்தும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். டிஆர்ஓ இந்துமதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மாரியப்பன், நாகை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாகை, ஏப்.13: நாகை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

மாவட்ட நீதிபதி செந்தில்குமார் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதிகள் தமிழரசி, பன்னீர்செல்வம், சார்பு நீதிபதி ஜெகதீசன், குற்றவியல் நீதிபதிகள் சீனிவாசன், சுரேஷ் கார்த்தி ஆகியோர் தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதிகளாக செயல்பட்டு வழக்குகளுக்கு தீர்வு கண்டனர். இதில் விபத்து காப்பீடு, குடும்ப நல வழக்கு, சிவில் வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 727 வழக்குகள் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 4 கோடியே 10 லட்சத்து 14 ஆயிரத்து 116 வசூல் செய்யப்பட்டது.

Related Stories: