அரசு கல்லூரி விடுதிகள் கொரோனா வார்டுகளாக மாற்றும் பணி தீவிரம்

விருத்தாசலம், ஏப். 13: விருத்தாசலம் பகுதியில், அரசு கல்லூரி விடுதிகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் பணியில் விருத்தாசலம் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின்போது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோரை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி பிற்பட்டோர் மாணவியர் விடுதி மற்றும் ஆலடி சாலையில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அதே விடுதிகளை கொரோனா வார்டுகளாகவும் மாற்றி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீண்டும் அதே விடுதிகளை கொரோனா வார்டுகளாக மாற்ற மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார். அதன்படி கொரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக மீண்டும் அதே கல்லூரி விடுதிகளை கொரோனா வார்டுகள் அமைப்பதற்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணியில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் ஆலோசனையின்படி, தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: