திருவில்லிபுத்தூரில் சாலையோர குப்பை புகையால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

திருவில்லிபுத்தூர், ஏப். 10:  திருவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகளை எரிப்பதால், உருவாகும் புகையால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரை, ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வாகனங்களும் அடிக்கடி சென்று வருகின்றன.

இரவு, பகல் பாராமல் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பைகளை குவித்து தீ வைக்கின்றனர். இதில் ஏற்படும் புகை மண்டலம் சாலையை மறைக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எறிய விட்டுச் செல்லும் அவலம் உள்ளது.

மேலும், எதிர்வரும் வாகனங்களை தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் குப்பைகளை குவித்து தீ வைப்பவர்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: