குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்

திருச்சி, ஏப். 10: திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் கோட்டம், வார்டு எண்.7, 27க்குட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டின் (பிச்சை நகர் பகுதியில்) மேல்புறத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கொள்ளிடம் குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட 500 எம்.எம் விட்டமுள்ள பம்பிங் மெயின் உள்ளது. இதன்மூலம் சஞ்சீவி நகர், விறகுபேட்டை, ஜெகநாதபுரம், மகாலெட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம் மற்றும் கல்லுக்குழி ஆகிய 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மாநகராட்சி மூலம் பம்பிங் மெயின் குழாயினை சாலையோரம் மாற்றியமைக்கும் பணி இன்று (10ம் தேதி) மற்றும் நாளை (11ம் தேதி) என 2 நாட்களுக்கு நடக்கிறது. இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் நாளை (11ம் தேதி) ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: