நீதிமன்றம் எதிரே தேங்கி நிற்கும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு  சாலையில்  நீதிமன்றம் எதிரே கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில்  பொதுமக்கள் உள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் ஒட்டி ரெட்டம்பேடு சாலை உள்ளது. இந்த சாலை ஓரமாக மாவட்ட  குற்றவியல் நீதிமன்றம், 5 கல்யாண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளிட்ட  வீடுகள் உள்ளன. ரெட்டம்பேடு சாலையின் ஒருபுறம் கால்வாய் இல்லாமல் வீடு, கல்யாண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஆங்காங்கே குட்டை போல் நிற்பது வழக்கமாகியுள்ளது. தொடர்ந்து  இந்த கழிவுநீர்  அருகிலேயே   மாவட்ட  குற்றவியல் நீதிமன்றத்துக்கு கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை, பஞ்செட்டி, கவரப்பேட்டை, புதுவாயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பொதுமக்கள், குற்றவாளிகள், காவல் துறை அதிகாரிகள் வருவதும் போவதுமாக  இருந்து வந்த நிலையில் அந்த கழிவுநீரால் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்நிலையில் இங்கு,  தேங்கி நிற்கும் கழிவு நீரால் அங்கு உள்ள உணவகத்தில்  உணவு  அருந்த முடியாமலும்  டீ, தண்ணீர் கூட, குடிக்க முடியாத அளவிற்கு  துர்நாற்றம் வீசுகிறது.  இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அங்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.  அதே நேரத்தில், அவ்வழியாக செல்லும் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் அந்த இடத்தை கடக்கும்போது மூக்கை மூடிக்கொண்டுதான் செல்லவேண்டிய அவல நிலை உள்ளது.  கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த நிலையே நிடித்து வருகிறது. இந்த அவல நிலையை சீர் செய்ய  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் அகற்றி கால்வாய் அமைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுகின்றனர். 

Related Stories: