திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தரங்கம்பாடி, ஏப்.10: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரா் அபிராமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விநாயகா், சந்திரசேகரா், சண்டிகேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கோயில் நிர்வாகத்தினா் கொரோனா முன்னெச்சரிக்கையோடு கோயில் குருக்கள் மற்றும் திரளான பக்தா–்கள் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். மேலும் தொடா்ந்து விழா நாட்களில் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு கோயில் வளாகத்திற்குள் நடக்கிறது. வரும் 19ம் தேதி (திங்கள் கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினா் கோயில் குருக்கள் செய்துள்ளனர்.

Related Stories: