மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5.99 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு, ஏப். 9: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.5.99 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்தது. தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 214 அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் என அனைத்திற்கும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை விடப்படுவதற்கு முந்தைய நாளான 3ம் தேதி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரூ.12 கோடிக்கு மது விற்பனையாகின. இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, நேற்று முன்தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கடை முன் அமர்ந்திருந்தனர். கடை திறந்தபின் மதுபிரியர்கள் முட்டி மோதி மது வகைகளை வாங்கி சென்றனர். இரவு 7 மணிக்கு மேல் வழக்கத்தை கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சேர்த்து ரூ.5 கோடியே 99 லட்சத்து 48 ஆயிரத்து 950க்கு மது விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: