சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரத்தில் சுற்றுச்சுவர் கூட இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் கால்நடைகள் உள்ளே புகும் அவலம்

சாத்தான்குளம், ஏப். 9:  சாத்தான்குளம் அருகே சுற்றுச்சுவர் கூட இல்லாத ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆடு, மாடுகள் உள்ளே புகும் அவலம் தொடர்கிறது. இதனால் அவதிப்படும் மக்கள், இங்கு சுற்றுச்சுவர் கட்டித்தருவதோடு மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்களுக்கான குடியிருப்புகளும் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  சாத்தான்குளம் தாலுகாவில்  ஆனந்தபுரம், சாலைபுதூர், முதலூர், படுக்கபத்து ஆகிய அரசு ஆரம்ப  சுகாதாரநிலையங்கள் செயல்படுகின்றனர். இதில் சாலைபுதூர் ஆழ்வார்திருநகரி  ஒன்றியத்துக்கும், ஆனந்தபுரம், முதலூர், படுக்கப்பத்து சாத்தான்குளம்  ஒன்றியத்தில் உள்ளது. ஆனந்தபுரம்- நாசரேத் செல்லும் சாலையில் செயல்படும்  ஆரம்ப சுகாதார நிலைத்தில் மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகினறனர். சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 24 மணி நேரம்  செயல்படும் இந்த சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் எதுவும் இல்லை. சுகாதார நிலையம் முன் பெயரளவில் காட்சிப் பொருளாக கதவு மட்டும் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால் ஆடு, மாடு,  நாய்கள் எளிதில் உள்ளே நுழையும் அவலம் தொடர்கிறது. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது கவனம் செலுத்தி  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தரவேண்டும். குறைந்தபட்சம் கம்பி கொண்டு தடுப்புவேலியாவது கட்ட முன்வர வேண்டும். ேமலும்  இங்கு பணியாற்றும் செவிலியர்கள்,  மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: