விழுப்புரம் அருகே குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது

விழுப்புரம், மார்ச் 5:  விழுப்புரம் அருகே தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அருள்மொழி (25). இவர் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள உணவகங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலிப்பது, ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டுவது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது  போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பிரபல ரவுடியான இவர் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தாலும், ஜாமீனில் வெளிவரும் அருள்மொழி மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அருள்மொழியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து விக்கிரவாண்டி போலீசார் அருள்மொழியை நேற்று கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>