திமுக வேட்பாளர் பிரபாகரன் வாக்குறுதி வாலிகண்டபுரத்தில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

பெரம்பலூர்,ஏப்.2: வாலிகண்டபுரத்தில் பறக்கும்படை நடத்திய சோதனையில் 150 குவாட்டர் பாட்டில்கள், 48 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடப்பதை தடுக்க, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள், மது வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பாக நிலை கண்காணிப்புக்குழு, பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.இதனையொட்டி பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும்படையை சேர்ந்த தனி துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் அரசு டாஸ்மாக் மதுபான கடை பாருக்கு அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதாக தகவலறிந்து அங்கு சென்று பார்த்தபோது, கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, ஆவட்டி, தெற்கு தெருவை சேர்ந்த நல்லு(61) என்பவர் கள்ளத்தனமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 150 குவாட்டர் பாட்டில்கள், 48 பீர் பாட்டில்கள் மொத்தம் 198 மது பாட்டில்களை பறிமுதல் செய்து,பெரம்பலூர் மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமிடம் ப்படைத்தனர்.இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, நல்லு மீது வழக்குப்பதி ந்து, கைதுசெய்து, விசாரணை நடத்திவருகிறார்.இச் சம்பவம் வாலிகண்டபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: