கலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு தா.பழூர் அருகே இடங்கண்ணியில் வீட்டு தோட்டம் அமைத்த மாணவன்

தா.பழூர், ஏப்.1: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இடங்கண்ணியில் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து குழு அமைத்து கடந்தாண்டு ஜூலை மாதம் வீடுவீடாக சென்று விதைகள் வழங்கினர்.அப்போது வீடுகளில் உள்ளவர்களிடம் விதைகளை விதைக்க தோட்டத்தில் தனியாக இடங்கள் தேவையில்லை. வேலி ஓரங்கள், மரத்தடி ஓரங்களில் விதைகளை விதைத்தால் போதுமானது. இவை தானாக முளைத்து கொடியாக ஓடி காய்களை தரும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் மழைக்காலம் துவங்கியதால் வீட்டு தோட்டத்தில் குழிதோண்டி விதைகளை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றி வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தால் சிறுவர்கள் வீட்டில் இருந்து வருவதால் அவர்களுக்கும் மரம், செடிகள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவானது.

இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் பலரும் காய்கறி தோட்டம் அமைத்து அதிகப்படியான காய்களை விற்பனை செய்து சேமிக்க துவங்கியுள்ளனர். இதை தனது லட்சியமாக எடுத்து கொண்ட இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்த கவிநிலவன் என்ற 9ம் வகுப்பு படிக்கும் மாணவன், தனது வீட்டின் சுவர் ஓரம் சுரைக்காய் விதையை விதைத்து தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்துள்ளார். இதனால் சரசரவென சுரைக்காய் செடி வளர்ந்தது. இதை மாடியில் படர விட்டு கொடிகள் அதிகமாக ஓடி பூக்கள் பூக்க துவங்கியது. பின்னர் காய்கள் காய்க்க துவங்கியது. இதில் கிடைத்த முதல் காயை விதை கொடுத்தவர்களை அழைத்து வழங்கினார். இதை ஊக்குவிக்கும் விதமாக அந்த சிறுவனுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் உண்டியல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த சுரைக்காய் கொடி மூலம் 50க்கும் மேற்பட்ட காய்களை அந்த சிறுவன் விற்பனை செய்துள்ளார். இதேபோல் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் பலரும் காய்களை உற்பத்தி செய்து மலிவான விலைக்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவனின் ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: