எழும்பூர் திமுக பணிமனை மீது தாக்குதல்

சென்னை, ஏப்.1: எழும்பூர் திமுக பணிமனை மீது தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். எழும்பூர் தொகுதியில் திமுக தொகுதியில் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் பரந்தாமன் போட்டியிடுகிறார். இதற்காக கட்சியினர் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக வட்டம் வாரியாக தேர்தல் பணிமனைகள் அமைத்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எழும்பூர் 104வது வட்டத்தில், திமுக பணிமனை அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் கட்சியினர் வேலை செய்து வந்தனர். அங்கே வந்த சில மர்ம நபர்கள், பணிமனையில் இருந்த சேர், டேபிள் போன்ற பொருட்களை எடுத்து உடைத்து, பணிமனையை சேதம் செய்துள்ளது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கேட்ட போதும், மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் சம்பவத்தில் ஈடுபட்ட புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்த ஆர்.முரளி என்பவரை கைது செய்தனர். மேலும், குணா மற்றும் வெங்கடேசன் என்ற இரண்டு பேரை தேடி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: