காஞ்சிபுரம், மார்ச் 30: காஞ்சிபுரத்தை அடுத்த பெரியார் நகர் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.39 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினனர் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் பணம், நகை மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதனடிப்படையில் காஞ்சிபுரத்தை அடுத்த பெரியார் நகர் பகுதியில் நேற்று நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி கீதப்பிரியா தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.