சர்வதேச சுற்றுலா நகரமாக கொடைக்கானல் மாற்றப்படும் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் உறுதி

கொடைக்கானல், மார்ச் 29: கொடைக்கானலில் பழனி தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமார் தீவரி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது: கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு கடைகள் வர்த்தக நிறுவனங்களை தற்போதைய ஆளுங்கட்சி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதை சட்டமன்றத்தில் நானும், நமது தலைவர் ஸ்டாலின் பேசி தடுத்து நிறுத்தினோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியற்ற வர்த்தக கட்டிடங்களை இடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தற்போதைய ஆளும் கட்சி எடுத்தது. இதனால் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த லட்சணத்தில் அதிமுகவினர் கொடைக்கானலில் எப்படி ஓட்டு கேட்கிறார்கள்?

திமுக ஆட்சி அமைந்தவுடன் கொடைக்கானலில் ஆண்கள் கல்லூரி அமைக்கப்படும். கொடைக்கானல் பழனி மலை சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும். இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும். கொடைக்கானல் ஒரு சிறந்த சர்வதேச சுற்றுலா நகரமாக உயர்த்தப்படும் என்று பேசினார். கொடைக்கானல் செண்பகனூர் மூஞ்சிக்கல் நாயுடுபுரம் அப்சர்வேட்டரி உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார் கொடைக்கானல் கிறிஸ்தவ மக்கள் நடத்திய குருத்தோலை பவனியில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார் பங்குனி உத்திரக் காவடிப் ஊர்வலத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, கொடைக்கானல் நகர செயலாளர் முகமது இப்ராஹிம், அவைத்தலைவர் மரிய ஜெயந்தன், துணைச்செயலாளர் சக்தி மோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் செல்லத்துரை, மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனி ராஜா, மதிமுக நகர செயலாளர் தாவூத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: