இளம்பிள்ளையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை

சேலம், மார்ச் 26: சேலம் வீரபாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக டாக்டர் தருண் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்கு உட்பட்ட  இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில், நேற்று (25ம்தேதி) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இஸ்லாமிய சமூக மக்களை சந்தித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார். இதேபோல் நெசவாளர் பிரச்னைகளை கேட்டறிந்து, வெற்றி பெற்றவுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து வேட்பாளர் டாக்டர் தருண் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக இளம்பிள்ளையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இளம்பிள்ளை சேலைகள் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உள்ளனர். ஆனால் நெசவு தொழிலையோ, நெசவாளர்களையோ மேம்படுத்த எந்த நடவடிக்கையையும் அரசு  மேற்கொள்ளவில்லை. இளம்பிள்ளையில் ஜவுளிபூங்கா என்பது, பல ஆண்டுகளாக அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக மட்டுமே உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன், இளம்பிள்ளையில் ஜவுளிபூங்கா அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்,’ என்றார்.அப்போது, பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், இளம்பிள்ளை பேரூர் செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மோகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: