நங்கவள்ளி ஒன்றியத்தில் தேர்தல் அறிக்கைகளை வழங்கி திமுக வேட்பாளர் பிரசாரம்

இடைப்பாடி, மார்ச் 23: இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று நங்கவள்ளி, வனவாசி, சூரப்பள்ளி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் திமுக தேர்தல் அறிக்கையை துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்றனர். அப்போது, சம்பத்குமார் கூறுகையில், ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை, 1500 குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4000, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் காஸ் மானியம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் முதல்வராக அரியணை ஏறியதும், நிறைவேற்றப்படும்,’ என்றார்.தொடர்ந்து, அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது, திமுக நகரசெயலாளர் பாஷா, ஒன்றிய செயலாளர்கள் நங்கவள்ளி ரவிச்சந்திரன், இடைப்பாடி நல்லதம்பி, கொங்கணாபுரம் பரமசிவம், தகவல் தொழில் நுட்பஅணி திருநாவுக்கரசு, செல்வகுமார், முத்தமிழ்செல்வன், செந்தில்குமார், பேரூர் செயலாளர்கள் அர்த்தநாரீஸ்வரன், பழனிச்சாமி, தென்றல், மாதையன், வடிவேலு, தங்கவேலு, சிங்காரவேலு, ராஜமாணிக்கம், ரவி, பாலு, அழகேசன், ஜெயராமன், நெடுஞ்சேரலாதன், மணி, மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: