சித்தூர் பகவதி அம்மன் கோவில் கொங்கண்படை திருவிழா

பாலக்காடு, மார்ச்23: பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகவதி அம்மன் கோவில் கொங்கண்படை திருவிழா மிகவும் எளியமுறையில் நேற்று நடைபெற்றது. சித்தூர் பகவதி அம்மன்கோவில் திருவிழா ஆண்டுந்தோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாகும். இம்முறை கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விழா ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்த நிலையில் மிகளவும் எளியமுறையில் கொண்டாடுவதற்கு விழாக் கமிட்டியினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். கடந்த 19 ம்தேதி கொங்கண்பாடை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறுவர்கள் ஒன்றுக்கூடி நடைபெற வேண்டிய கும்மாட்டி நிகழ்ச்சிகள் ரத்து செய்திருந்தனர். மேலும், நேற்றுமுன்தினம் இரவு நடைபெற வேண்டிய கொங்கண் வரவு, படையெழுச்சி, போர் ஆகிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கொச்சின் தேவஸ்தானம் மற்றும் விழா கமிட்டியினர் ரத்து செய்தனர். அபிஷேக ஆராதனைகள் மட்டும் நடைபெற்றன. நேற்றைய தினம் கோவில் நடை காலை 4 மணிக்கு ஈட்டுவெடியுடன் திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூ்ன்று யானைகள் அலங்கார அணிவகுப்பு மற்றும் பஞ்சவாத்யங்களுடன் அம்மன் கோவில் வளாக்த்தில் திருவீதியுலா வந்தார். இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories: