காக்களுர் சிப்காட் தொழிற்பூங்காவில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர், மார்ச் 23: சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்களுர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் நடைபெற்றது. அப்போது, தொழிற்சாலை வளாகத்தில் கேபிள்களை வைத்து, 100 சதவீதம் வாக்களிக்க ஏப்ரல் 6 என்ற வாசக வடிவில் அமைக்கப்பட்டிருந்ததை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது, “100 சதவிகித வாக்குப்பதிவு உறுதி செய்யும் விதமாக பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காக்களுர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 850க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர், வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவில் தொழிலாளர்கள் கையுறைகளை அணிந்து மாதிரி வாக்குப்பதிவில் பதிவிட்டு, விழிப்புணர்வு பெற்றனர்,” இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழிற்மையம் பொது மேலாளர் மணிவண்ணன், தொழிற்சாலை தலைமை செயல் அலுவலர், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: