கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் மறைமலைநகர் நகராட்சியில் தீவிர வாக்கு சேகரித்தார். இதில் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கஜா என்கிற கஜேந்திரன் நேற்று காலை முதல் இரவு வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதற்கு அதிமுக நகர செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார் தலைமை தாங்கினார், முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.ஜி.கே. கோபிகண்ணன், முன்னாள் வார்டு கவுன்சிலர் தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.