திருப்புத்தூர், மார்ச் 20: திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, பிள்ளையார்பட்டியில் நேற்று தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், குன்றக்குடி சுப்பிரமணியன், விராமதி, மாணிக்கம், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பிரசாரத்தில் பெரியகருப்பன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘தற்போது இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தாலேயே பலர் திருவிழாக்களுக்கு வருவதைப்போல வரலாம், போகலாம். ஆனால் என்னை பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருக்கிறேன்.