மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் மனு தாக்கல்

மானாமதுரை, மார்ச் 18: மானாமதுரை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தமிழரசி அறிவிக்கப்பட்டார். கடந்த ஐந்து நாட்களாக மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் தாலுகாக்களில் ஒன்றிய நகர நிர்வாகிகளுடன் ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று மதியம் தாலுகா அலுவலகம் வந்த அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலெட்சுமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பின்னர் அவர், கூறியதாவது, கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களால் மானாமதுரை தொகுதி எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை. அதிமுக அரசு அமை ந்து பத்தாண்டுகள் ஆகியும் சிப்காட் தொழிற்பேட்டையில் நலிவடைந்த தொழிற்சாலைகளை புனரமைத்தல், 3 தாலுக்காக்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்குதல், முடங்கியுள்ள அரசு பஸ் டெப்போவை மீண்டும் செயல்படுத்துதல், திருப்புவனம், இளையான்குடி பேருந்து நிலையம், மானாமதுரையில் அரசு மகளிர் கல்லூரி கொண்டு வருதல், நெல், மிளகாய் தானியங்களை குளிர்பதனக்கிடங்கு முறையில் பாதுகாத்தல் போன்ற கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை. நான் வெற்றி பெற்றதும் உங்களோடு ஒருவராக இருந்து இந்த கோரிக்கைகளை முறையாக பட்டியலிட்டு நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றார்.

Related Stories: