பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தை காரையூர் பகுதியை ஒன்றியமாக உருவாக்க வேண்டும்

 

பொன்னமராவதி, ஆக. 3: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 42 கிராம ஊராட்சி ஒரு நகராட்சி உள்ளது. திருக்களம்பூர் ஊராட்சியில் இருந்து சேரனூர் ஊராட்சி வரை, கூடலூர் ஊராட்சியில் இருந்து ஒலியமங்களம் ஊராட்சி, கோவணூர்-செவலூரில் இருந்து மைலாப்பூர் என நீண்ட தூரம் அதிக ஊராட்சி மற்றும் அதிக பரப்பளவு உள்ளது. பொன்னமராவதி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து பொன்னமராவதி ஒன்றியம் மற்றும் காரையூர் பகுதியை உள்ளடக்கிய ஊராட்சிகளை சேர்த்து ஒரு ஒன்றியமாக உருவாக்கினால் பொதுமக்கள் நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை குறையும்.

மேலும் காரையூரில் அரசு ஆரம்பசுகாதார நிலையம், காவல் நிலையம், வேளாண்துறை அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், தேசிய வங்கி, அரசு மேல் நிலைப்பள்ளி, ஆரம்ப்பள்ளி, உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள், வாரச்சந்தை உள்ளிட்டவை உள்ளது.காரையூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பேருந்து வசதியும் உள்ளது. எனவே பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து காரையூர் பகுதியை தனி ஊராட்சி ஒன்றியமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: