கந்தர்வகோட்டை பகுதியில் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

 

கந்தர்வகோட்டை, ஆக. 3: கந்தர்வகோட்டை பகுதியில் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேரூராட்சியில் இயங்கும் வரும் அனைத்து நியயா விலை கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவரவர் குடும்ப அட்டைகளில் தற்சமயம் வரை கைவிரல் ரேகை, கருவிழி பதிவு செய்யதவர்கள் உடனடியாக பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்படி நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வெளியூர்களில் வசித்து வந்தவர்கள் இங்க வந்து சிறப்பு முகாமில் பயன் அடைந்தனர்.

இதில் கோவிலூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செயல்படும் அங்காடி விற்பனையாளர் சிவகுமார் கூறியதாவது: இன்னும் சிலர் மட்டும் கைரேகை, கரு விழி பதிவு செய்யவில்லை எனவும் அவர்களுக்கு செல்போன் மூலம் அழைப்பு கொடுத்து வர வழைந்து பதிவு செய்வதாக கூறுகிறார்.
இன்று பயன்டைவர்கள் கூறும்போது சிறப்பு முகாம் நடத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.

Related Stories: