சிவகிரி, ஆக.1: சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. தலைமை வகித்த சங்கரன்கோவில் ஆர்டிஓ அனிதா, சாதிச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பிறப்பு சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பழங்குடியின மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். நிகழ்வில் தாசில்தார்கள் மைதீன் பட்டாணி, வெங்கட சேகர், ராமலிங்கம், பழனிவேல், சாமி, ஆர்ஐக்கள் கணேசன், ஆனந்தவள்ளி, கஸ்தூரி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
