திருத்துறைப்பூண்டி, ஜூலை 31: ஏகேஎஸ் தயார் மறைவுயோட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சித்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனறந்த ஏ.கே.சுப்பையாவின் துணைவியாரும், திமுக விவசாய அணிச் மாநில செயலாளர் ஏகேஎஸ் விஜயனின் தாயாருமான ஏகேஎஸ் சுப்பம்மாள் மறைவையொட்டி, அன்னாரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
