கொரோனா பரவல் அதிகரிப்பு அரசு காஜி எச்சரிக்கை

ஈரோடு, மார்ச் 17:    கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஈரோடு அரசு காஜி முகமது கிபாயத்துல்லா ஜமாத்துகளுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை போல, ஈரோடு மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்து உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களிலும், பொது நிகழ்வுகளிலும் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனையும் செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளது. இதனால், அனைத்து தரப்பினருக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, அரசு அறிவித்த அனைத்து விதிமுறைகளையும் அனைவரும் கடைபிடித்து கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: