புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்கணக்கான குக்கிராமங்களின் மத்திய பகுதியாக கீரனூரில் இருந்து நேரடியாக சென்னைக்கு ரயில் வசதி இல்லாத சூழலில், போட்மெயில் விரைவு ரயிலுக்கு இங்கு நிறுத்தம் வழங்க மத்திய ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி, புதுக்கோட்டையின் மையப்பகுதியில் கீரனூர் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வரையிலான ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்துக்கான பாதையில், மையத்தில் அமைந்துள்ள ஊர் கீரனூர். புதுக்கோட்டையிலிருந்து 25 கிமீ தொலைவும், திருச்சியிலிருந்து 27 கிமீ தொலைவையும் கொண்டது. குளத்தூர் தாலுகா , குன்றாண்டார்கோவில், விராலிமலை வட்டத்தின் கிழக்குப்பகுதி உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு கீரனூர்தான் பெருநகரம். கரோனா பொதுமுடக்கத்துக் குப் பிறகு கீரனூரில் எந்த ரயிலும் நிற்காத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சு. திருநாவுக்கரசர், எம் எம்.அப்துல்லா ஆகியோரின் முயற்சியில் மன்னார்குடி- காரைக்குடி விரைவு ரயில், திருச்சி- ராமேசுவரம் விரைவு ரயில் போன்றவை நிற்கத்தொடங்கின.
லட்சம். அதன்பிறகு, 2024-25ம் நிதியாண்டில் 6.61 2025-26-நிதியாண்டில் ரூ.10.42 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ரயில்களைப் பயன்படுத்த வேண்டியதன் தேவை மற்றும் அவசியம் குறித்து (கட்டணம் மற்றும் பயண நேரம்) இங்குள்ள ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வீதிவீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான், சென் னைக்குச் செல்வதற்கான நேரடியான ரயில் ஒன்று தேவை என்ற அடிப்படையில், சென்னை எழும்பூர்- ராமேசுவரம் போட்மெ யில் விரைவு ரயிலுக்கு கீரனூரில் நிறுத்தம் வேண்டும். இதுவரையில் கீரனூர் மற்றும் சுற்றுப்புற ரயில் பயணிகள், சென்னை செல்வதற்கு திருச்சிக்கோ அல்லது புதுக்கோட்டைக்கோ சென்று ஏறி வருகின்றனர். அதேபோல, கீரனூர் வருவதற்காக, சென்னையிலிருந்து திருச்சி வந்தோ அல்லது புதுக்கோட்டை வந்தோ பேருந்து அல்லது இதர வாடகை வாகனங்களைப் பிடித்துதான் கீரனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு வர வேண்டியிருக்கிறது. இந்த சிரமத்தை மத்திய ரயில்வே துறை போக்க வேண்டும் என ரயில்பயணிகள் நலச் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து திருச்சி- காரைக் குடி- மானாமதுரை- விருதுநகர் இருப்புப் பாதைப் பயணிகள் நலக் கூட்டமைப்பின்னர் கூறியது: கீரனூர் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியி னர், அனைத்து பொதுநல சமூக அமைப்பினர் கூட்டமைப்பை உருவாக்கி, தொடர் போராட்டங் களை நடத்தி வந்த நிலையிலும் கூட சென்னைக்கு நேரடி ரயில் வசதி கீரனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, போட்மெயில் விரைவு ரயில் கீரனூரில் நிறுத்தப்பட் டால், குளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த அண்டக்குளம், அம்மா சத்திரம், இரும்பாளி, களமாவூர், கிள்ளனூர், கிள்ளுக்கோட்டை, குன்றாண்டார்கோவில், லட்சும ணம்பட்டி, மண்டையூர், மங்கதே வன்பட்டி, முத்துக்காடு, வெள்ள னூர், நார்த்தாமலை, புலியூர், சத் தியமங்கலம், சீமானூர், தொடை யூர், வத்தனாக்கோட்டை உள் ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்கள் பயன்பெ றுவார்கள் என்றார் அந்தோணி மைக்கேல் ஜாக்சன். குக்கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பயணி களின் நீண்டகாலக் கனவை மத் தியரயில்வே துறை நிறைவேற்றித் தர வேண்டுமென அப்ப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
