அறந்தாங்கி , ஜூலை 30: அத்தாணி அரசு பள்ளிக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள். கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணமேல்குடி அடுத்த அத்தாணி பகுதியில் ஒரு அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுபகுதி கிராமங்கலிருந்து ஏராளமான மாணவர்கள் தினசரி பேருந்தில் வருகின்றனர். இந்த பள்ளி திருவப்பாடி பேராவூரணி சாலையில் உள்ளது. தினசரி காலை நேரங்களில் அத்தாணி பள்ளிக்கு ஒரு தனியார் பேருந்து செல்கிறது.
அந்த பேருந்தில் கூட்டமாக இருப்பதால் மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் ஆபத்தான முறையில் பேருந்தில் படிக்கட்டு மற்றும் பேருந்தின் லக்கேஷ் ஏற்றும் கம்பிகளில் ஏறி ஆபத்தான முறையில் தினசரி பயணம் செய்கின்றனர். பெரும் விபத்து நடக்கும் முன் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
