விவசாயிக்கு அரிவாள் வெட்டு

 

நத்தம், ஜூலை 30: நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (35). விவசாயி. இவரது அண்ணன் தாமோதரன் (44). இவரிடம் தம்பி பாலகிருஷ்ணன் தனது சொத்தை பிரித்து பங்கு தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாமோதரன் அவரது தம்பி கந்தசாமி உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து சொத்து எல்லாம் தர முடியாது எனக் கூறி பாலகிருஷ்ணன் வீட்டை சேதப்படுத்தி என கூறி அரிவாளால் வெட்டி விட்டு மிரட்டல் விடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் செய்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தாமோதரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: