திண்டுக்கல், ஜூலை 29: திண்டுக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளதாவது,
‘‘திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்,அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், முன்னோடி வங்கிகள் மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலமும் விவசாயிகளுக்கு, கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் வழங்க இருக்கிறார்கள். கூட்டத்தில் விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்’’ என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
