காந்தி மியூசியத்தில் சுயதொழில் பயிற்சி

 

மதுரை, ஜூலை 28: மதுரை காந்தி மியூசியம் சார்பில் ஆக.1ம் தேதி காலை 10.30 மணி முதல் மலை 4 மணி வரை சுயதொழில் பயிற்சி நடத்தப்படுகிறது. இவ்வகுப்பில் பாத்திரம் துலக்கும் திரவம், பவுடர், துணி துவைக்கும் பவுடர், அகர்பத்தி, ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பு பயிற்சிகள் வழங்கி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆர்வமிருப்போர், காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜனை 86100 94881 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதியலாம். இத்தகவலை காந்திமியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: