காரைக்குடியில் இன்று மின்தடை

 

காரைக்குடி, ஜூலை 28: காரைக்குடி துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 28) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதையடுத்து இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்குடி நகர், பேயன்பட்டி, ஹவுசிங்போர்டு, செக்காலை கோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள், கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூர் ரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: