சிவகங்கை, ஜூலை 28: அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) சார்பில் தொழிற் பழகுனர் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
பொறியியல் பட்டம், பட்டயபடிப்பு (இயந்திரவியல், தானியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை அறிவியல், வணிக பட்டதாரிகள் 2022 முதல் 2026 வரையிலான ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் தொழிற் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதன்படி ஓராண்டு நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளில் இணைய விரும்புவோர், https://nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.08.2026 ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
