காசநோய் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தல்

 

சிவகங்கை, ஜூலை 28: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: காசநோய்த் தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருக்கக்கூடாது. தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்க போதிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2025க்குள் காசநோய் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி காசநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால், அதிக ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் 52 காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி மையங்கள் உள்ளன.

மேலும், 14 புதிய இருகண் நுண்ணோக்கிகள், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்களின் உபயோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. காசநோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனமும் செயல்பாட்டில் உள்ளது. இந்த வாகனத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவியாக மாதந்தோறும் ரூ.500 வீதம் சிகிச்சை பெறும் காலகட்டத்தில், அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: