திருவாரூர் நகராட்சியில் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

 

திருவாரூர், ஜுலை 27: திருவாரூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் குளங்கள் சுத்தம் செய்யும் பணியினை கலெக்டர் மோகனசந்திரன் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். திருவாரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில், நகரில் உள்ள 30 வார்டுகளிலும் உள்ள குளங்கள் சுத்தம் செய்யும் பணி, துவாரங்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளதை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் புதுதெரு பகுதியிலுள்ள அய்யனார்குளம் சுத்தம் செய்யும் பணியினை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

மேலும் நகர் பகுதிகளில் உள்ள ஆயிரத்து 838 நாய்களில், இதுவரை ஆயிரத்து 744 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆய்வின்போது, திருவாரூர் நகராட்சி தலைவர் புவனபிரியா செந்தில், கமிஷ்னர் சுரேந்திரஷா, கால்நடை நோய் புலனாய்வு துறை உதவி இயக்குநர் சிவகுமார், மாவட்ட விலங்குகள் நல அலுவலர் திருமூர்த்தி, கவுன்சிலர்கள் மலர்விழி கலியபெருமாள், கஸ்தூரி மணிராவ், சுகாதார அலுவலர் டேவிட் பாஸ்கர் ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் தங்கராமு, முருகானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Related Stories: