முருங்கை கிலோ ரூ.26க்கு விற்பனை

 

காங்கேயம், ஜூலை 27: வெள்ளகோவில் முருங்கை கொள்முதல் நிலையத்தில் ஞாயிறு தோறும் முருங்கை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கூடிய சந்தைக்கு வெள்ளக்கோவில், புதுப்பை, முத்தூர், காங்கயம், மயில்ரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 10 டன் முருங்கைகாயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் செடிமுருங்கை ரூ.20க்கும், கரும்பு முருங்கை ரூ.26க்கு விற்பனையானது.

பல்வேறு பகுதியில் இருந்து உற்பத்தி அதிகரித்ததால் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.15 விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் மரமுருங்கையை கொள்முதல் செய்த வியாபாரிகள் சென்னை உள்பட பல பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Related Stories: