ரூ.6.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

 

அவிநாசி, ஜூலை 30: அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏல வர்த்தகம் நடந்தது. ஏலத்திற்கு ஈரோடு, திருப்பூர் மாவட்ட பகுதிகளிலிருந்து 58 பருத்தி விவசாயிகள் 256 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். இதில், ஆர்சிஎச் பிடி ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,199 முதல் ரூ.9,506 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,599 முதல் ரூ.6,999 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் 78.09 குவிண்டால் பருத்தி ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதில், 7 பருத்தி வியாபாரிகள் கலந்து கொண்டு கொள்முதல் செய்தனர். அதேபோல, குன்னத்தூர் கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளர் சம்மேளனத்தில் நடந்த ஏலத்துக்கு மொத்தம் 750 கிலோ தென்னங்கருப்பட்டி வரத்தானது. கிலோ ஒன்றுக்கு ரூ.171 வீதம், 750 கிலோவுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

Related Stories: