தினசரி சந்தையில் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி தீர்மானம்

 

திருப்பூர், ஜூலை 29: திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் தங்கமுத்து தலைமை தாங்கினார். இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தினசரி சந்தையில் உள்ள கடைகளில் தரை தளத்தில் ரோடு பார்த்து உள்ள 18 கடைகள் 8 ஆயிரம் சதுர அடி மற்றும் உள்புறம் தரைதளத்தில் உள்ள 158 கடைகள் 20,115 சதுர அடியை மாநகராட்சி அமைத்த குழுவின் சார்பில் கண்டறியப்பட்ட வாடகை அடிப்படையில் ரூ.110 என்ற விகிதத்தில் மொத்தம் 28,115 சதுர அடிக்கு வாடகை தருவதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கடைகளை ஏற்கனவே தற்காலிகமாக காட்டன் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Related Stories: