சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்: வாகன ஓட்டிகள் அவதி

 

திண்டுக்கல் ஜூலை 27: திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல்லில் திருச்சி ரோடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலை ஓரங்களில், குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. திண்டுக்கல்லில் திருச்சி ரோடு நந்தவனப்பட்டியிலிருந்து மின்வாரிய குடியிருப்பு மற்றும் செட்டிநாயக்கன்பட்டி வரை உள்ள சாலையின் இரு பக்கமும் குப்பைகள் மற்றும் கட்டட இடுபாடுகளை கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் பலத்த காற்று வீசும் போது பறக்கும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்குகின்றனர். குப்பை கொட்டுவதற்கு ஊராட்சிகளில் இடமில்லாமல், சாலையின் ஓரங்களில் கொட்டுவதால் தெருநாய்கள் அதிகளவில் இந்த பகுதியில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குப்பை கொட்டுவதற்கு தனி இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: