கமுதி அருகே தர்ம முனீஸ்வரர் கோயில் வருஷாபிஷேக விழா

 

கமுதி, ஜூலை 27: கமுதி அருகே அரியமங்கலம் தர்ம முனீஸ்வரர் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. கமுதி அருகே அரியமங்கலம் கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோவில், இராஜா கோவில், லாட சன்னியாசி கோவில் மற்றும் சக்திவிநாயகர், அரியநாச்சியம்மன், முத்துமாரியம்மன் காளியம்மன், கருப்பசாமி, இருளாயிஅம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேக விழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் சுவாமி தர்ம முனீஸ்வரர் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நேற்று காலை யாகசாலை முன்பு புனித நீர் கலசங்களில் வைக்கப்பட்டு, ஏராளமான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் வேள்வி வளர்க்கப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை கோவிலின் அருகே வைக்கப்பட்டிருந்த முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக மேளதாளம், வாண வேடிக்கையுடன் சென்று அப்பகுதியில் உள்ள ஆற்றில் கரைத்தனர்.

Related Stories: