கீழக்கரையில் ரூ.90 லட்சத்தில் அரசு கட்டிடங்கள்: அமைச்சர் மதன் ராஜா திறந்து வைத்தார்

 

கீழக்கரை, ஜூலை 27: கீழக்கரை நகராட்சி சார்பில் ரூ.90 மதிப்பில் அரசு கட்டிடங்களை அமைச்சர் மதன்ராஜா திறந்துவைத்தார். கீழக்கரை நகராட்சி சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நாய்களுக்கான கருத்தடை மைய கட்டிடம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கீழக்கரை, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மைய கட்டிடங்களுக்கான திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், குறுசிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா திறந்து வைத்தார். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான இயன்முறை மருத்துவம், பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, உளவியல் ஆலோசனை மற்றும் சிறப்புக் கல்வி உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு சேவைகள் துறைசார் நிபுணர்களால் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் ஒரே இடத்தில் எளிதாகக் கிடைக்கும் வகையில் இம்மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெறலாம் என அமைச்சர் மதன் ராஜா தெரிவித்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரன், தவெக கீழக்கரை நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான், கீழக்கரை நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: