பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் பெண்கள்

*போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காங்கயம் : காங்கயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத வெளியூரை சேர்ந்த 4 பெண்கள் பூட்டிக்கிடக்கும் வீடுகளை தொடர்ந்து நோட்டமிட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றுள்ளனரா?, வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்கும் வகையில் சிலர் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.

இதனால், திருட்டு சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளை நோட்டமிடும் அந்த பெண்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, சந்தேகத்திற்கிடமாக நடமாடுபவர்களைக் கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: