போதைப்பொருளுடன் இளம்பெண் கைது

 

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் வாலிபர் ஒருவர் சிக்கினார். போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இதில் வெட்டுகாடு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் இருந்து போதைப்பொருளை வாங்கியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து இளம்பெண்ணுக்கு போலீசார் வலை விரித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் வெட்டுகாடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 38 கிராம் எம்டிஎம்ஏ கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ரேகா (33) என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வீட்டில் எம்டிஎம்ஏ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Related Stories: