தர்மபுரி, ஜூலை 24: நல்லம்பள்ளி அருகே விவசாய பட்டா நிலத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்த விவசாயிக்கு வனத்துறையினர் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பள்ளம் பகுதியில், விவசாய பட்டா நிலத்தில் அவிட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து, காட்டுப்பன்றிகளை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தர்மபுரி வனச்சரக அலுவலர் பெரியண்ணன் தலைமையில் வனவர்கள் நாராயணன், ரேவதி, சங்கர் மற்றும் வனக்காப்பாளர்கள் முருகன், கோமதி, செல்வகுமார், கிருஷ்ணமூர்த்தி, சபரிநாதன், ராஜேஷ் மற்றும் அன்பரசு ஆகியோர் கொண்ட குழுவினர், ஈச்சம்பள்ளம் கிராமத்தில் நேற்று மாலை ரோந்து பணி சென்றனர்.
